500 மற்றும் ஆயிரம் ரூபாய் நோட்டுகள் செல்லாத நிலையில் ரூபாய் நோட்டுகளை மாற்ற கோவையிலும் நள்ளிரவில் கூட்டம் அலைமோதியது.

189

500 மற்றும் ஆயிரம் ரூபாய் நோட்டுகள் செல்லாத நிலையில் ரூபாய் நோட்டுகளை மாற்ற கோவையிலும் நள்ளிரவில் கூட்டம் அலைமோதியது.
500 மற்றும் ஆயிரம் ரூபாய் நோட்டுகள் செல்லாது என பிரதமரின் அறிவிப்பை தொடர்ந்து, கோவையில் உள்ள ஏ.டி.எம்-களில் நள்ளிரவில் மக்கள் கூட்டம் நிரம்பிவழிந்தது. பல்வேறு இடங்களில் நீண்ட வரிசையில் பல மணிநேரம் காத்திருந்து ரூபாய் நோட்டுகளை மாற்றி சென்றனர். அதிக பயன்பாட்டின் காரணமாக பல்வேறு ஏ.டி.எம் மையங்கள் செயலற்று போனதால், பொதுமக்கள் பணம் எடுக்க முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். எந்த வித முன்னறிவிப்பும் இன்றி திடீரென வெளியிட்ட அறிவிப்பால், நள்ளிரவில் தூக்கத்தை தொலைத்து பணம் எடுக்க அலைய வேண்டி இருப்பதாக பொதுமக்கள் தெரிவித்தனர். இதனிடையே, உக்கடம் பகுதியில் உள்ள பெட்ரோல் பங்கில் 500, ஆயிரம் ரூபாய் நோட்டுகளை வாங்க மறுத்ததால் ரூபாய் நோட்டுகளை கையில் ஏந்தியவாறு பொதுமக்கள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. புதிய ரூபாய் நோட்டுகளை அதிகளவில் புழக்கத்தில் விட்டபின்னர், பழைய நோட்டுகளை நிறுத்துவது தான் வழக்கம் என கூறிய பொதுமக்கள், மக்கள் கவனத்தை திசை திருப்ப மத்திய அரசு திடீரென இந்த அறிவிப்பை வெளியிட்டு இருப்பதாகவும் அவர்கள் குற்றம் சாட்டினார்.