பழைய ரூபாய் நோட்டுகளை சுகாதார தொழிலாளர்களுக்கு ஊதியமாக வழங்கிய மாநகராட்சி அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, மாநகர காவல்துறை ஆணையரிடம் புகார் அளிக்கப்பட்டது.

256

கோவை மாநகராட்சியில் மூவாயிரத்திற்கும் மேற்பட்ட சுகாதார தொழிலாளர்கள் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வருகின்றனர். இவர்களது மாத ஊதியம் வங்கி கணக்கில் செலுத்தப்பட்டு வந்த நிலையில், அக்டோபர் மற்றும் நவம்பர் மாத ஊதியம் பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளாக வழங்கப்பட்டுள்ளது. கருப்பு பணத்தை மாற்றும் முயற்சியாகவே பழைய ரூபாய் நோட்டுகளை ஊதியமாக வழங்கியதாக ஊழியர்கள் குற்றம்சாட்டி உள்ளனர். இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, மாநகர காவல்துறை ஆணையரிடம் சுகாதார தொழிலாளர்கள் புகார் மனு அளித்தனர்.