நிறத்தை விமர்சித்ததால் உணவில் விஷம் வைத்து குழந்தைகள் உட்பட 5 பேரை கொன்ற மகாராஷ்டிராவை சேர்ந்த பெண்ணை போலீசார் கைது செய்தனர்.

ராய்கட் மாவட்டத்தை சேர்ந்த பிரக்யா சுர்வாசி என்பவரின் நிறம் குறித்து உறவினர்கள் விமர்சித்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த அந்த பெண், உறவினர் வீட்டில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த உணவில் விஷத்தை கலந்துள்ளார். இதனை சாப்பிட்ட 4 குழந்தைகள் உட்பட 5 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். உடல் நலம் பாதிக்கப்பட்ட 100-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், உணவில் விஷம் கலந்த பிரக்யாவை கைதுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.