நிக்கோபார் தீவுகளில் லேசான நிலநடுக்கம்…

85

நிக்கோபார் தீவுகளில் இன்று அதிகாலை ஏற்பட்ட நிலநடுக்கத்தால் பொதுமக்கள் பீதியடைந்தனர்.

இந்தியாவின் தென்கிழக்கே அமைந்துள்ள நிக்கோபார் தீவுகளில் இன்று அதிகாலை லேசான நிலநடுக்கம் உணரப்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 4.5 ஆக பதிவாகி உள்ளதாகவும், இந்த நிலநடுக்கம் கடலில் 35 கிலோ மீட்டர் ஆழத்தில் மையம் கொண்டுள்ளதாகவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நிலநடுக்கம் காரணமாக கட்டிடங்கள் குலுங்கியதால், பொதுமக்கள் பீதியடைந்தனர். எனினும் நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விவரம் குறித்த தகவல்கள் வெளியாகவில்லை. கடந்த சில நாட்களாக அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவு பகுதிகளில் அவ்வப்போது நிலநடுக்கம் ஏற்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.