4 ஆண்டுகள் சிறை, 10 கோடி அபராதம் விதித்ததை உறுதி செய்தது !

473

சொத்துக்குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில் சசிகலா உள்ளிட்டோர் குற்றவாளிகள் என உச்சநீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளது.
உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள் பினாகி சந்திரகோஸ், அமித்தவா ராய் அடங்கிய அமர்வு, சொத்து குவிப்பு வழக்கில் தீர்ப்பை அறிவித்தது. அதன்படி, சசிகலா.இளவரசி, சுதாகரன் உள்ளிட்டோர் குற்றவாளிகள் எனவும், உடனடியாக சரணடைய வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சொத்து குவிப்பு வழக்கில் இருந்து ஜெயலலிதா விடுவிக்கப்பட்டுள்ளார். சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு 4 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், பத்து கோடி ரூபாய் அபராதமும் உறுதி செய்யப்பட்டுள்ளது. 500 பக்கங்கள் கொண்ட இந்த தீர்ப்பை நீதிபதிகள் வாசித்தனர். சொத்து குவிப்பு வழக்கில் நீதிபதி குன்ஹா அளித்த தீர்ப்பு செல்லும் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. இதனையடுத்து, தண்டனைக்காலம் 4 ஆண்டுகள் உட்பட 10 ஆண்டுகளுக்கு தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பை சசிகலா இழக்கிறார்.