48 மணி நேரத்தில் தமிழகத்தின் ஓரிரு இடங்களில் மழைக்கு வாய்ப்பு – சென்னை வானிலை மையம்.

925

48 மணி நேரத்தில் தென் தமிழகத்தின் ஒரு சில இடங்களிலும், வட தமிழக உள் மாவட்டங்களின் ஓரிரு இடங்களிலும் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையத்தின் இயக்குனர் பாலச்சந்திரன் தெரிவித்தார். மாலத்தீவு மற்றும் வட இந்திய கடற்பகுதியில் குறைந்த காற்றழுத்த நிலை நிலவுவதால், 40 முதல் 50 கிலோ மீட்டர் வரை பலத்த காற்று வீசக்கூடும் என்றும், மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் எனவும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.