4 ஆயிரத்து 500 கோடி ரூபாய் அளவுக்கு சசிகலா தரப்பு பினாமி சொத்து – பரபரப்பு தகவல் ..!

943

4 ஆயிரத்து 500 கோடி ரூபாய் அளவுக்கு சசிகலா தரப்பு பினாமி சொத்து சேர்த்திருப்பதாக வெளியாகியிருக்கும் தகவல் பரப்பைபர ஏற்படுத்தியுள்ளது.
கடந்த நவம்பர் மாதம் சசிகலா தரப்புக்கு சொந்தமான 180க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறையினர் திடீர் சோதனை நடத்தினர். போயஸ் கார்டனில் உள்ள சசிகலா அறையிலிருந்து பென்டிரைவ் உள்ளிட்டவைகள் கைப்பற்றப்பட்டதாக கூறப்பட்டது. இந்நிலையில் சசிகலா தரப்பு 4 ஆயிரத்து 500 கோடி ரூபாய் அளவுக்கு பினாமி சொத்து சேர்த்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சோதனையின்போது கைப்பற்றப்பட்ட பென்டிரைவினை ஆய்வு செய்தபோது இந்த தகவல் கண்டறியப்பட்டதாக கூறப்படுகிறது. 80 நிறுவனங்களில் சசிகலா தரப்பினர் முதலீடு செய்திருப்பதற்கான ஆதாரங்கள் கிடைத்து இருப்பதாக தெரிகிறது. இதுகுறித்து விளக்கம் அளிக்குமாறு சசிகலா தரப்பினருக்கு நோட்டீஸ் அனுப்பும் பணியை வருமான வரித்துறையினர் மேற்கொண்டுள்ளனர். இந்த குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் 7 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.