ஒகி புயல் காரணமாக நடுக்கடலில் தத்தளித்த 4 கேரள மீனவர்கள் மீட்பு ..!

654

ஒகி புயல் காரணமாக நடுக்கடலில் தத்தளித்த 4 கேரள மீனவர்களை இந்திய கப்பற் படையினர் பத்திரமாக மீட்டனர்.
கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே கடலில் மீன் பிடிக்கச் சென்ற மீனவர்கள் ஏராளமானோர் ஒகி புயல் காரணமாக கரைக்கு திரும்பாத நிலையில், நடுக் கடலில் தத்தளித்துக் கொண்டு இருந்த 4 மீனவர்களை இந்திய கப்பற்படையினர் மீட்டுள்ளனர். மீட்கப்பட்ட மீனவர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
காணமல் போன மற்ற மீனவர்களை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. ஒகி புயலால் கேரள மாநில கடலோர மாவட்டங்களில் கடல் அலைகள் சீற்றத்துடன் காணப்படுகின்றன. கடல் நீர் குடியிருப்பு பகுதிகளுக்குள் நுழைந்துள்ளதால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.