கேரளாவில் திருநங்கைகளுக்கு தனி கூட்டுறவு வங்கி – முதலமைச்சர் பினராயி விஜயன்

409

கேரளாவில் திருநங்கைகளுக்கு தனி கூட்டுறவு வங்கியை தொடங்க அம்மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் உத்தரவிட்டிருப்பது பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

கேரள மாநிலத்தில் திருநங்கைகளை முன்னேற்றப் பாதைக்கு கொண்டுவரும் வகையில், அவர்களுக்கென்று தனி கூட்டுறவு வங்கியை தொடங்கிட அம்மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் உத்தரவிட்டுள்ளார். Transgender Co-operative society என்ற பெயரில் தொடங்கப்படவுள்ள இந்த கூட்டுறவு வங்கியின் மூலம் சுய தொழில் நிறுவனங்கள் தொடங்க திருநங்கைகளுக்கு வழி ஏற்படும் என திருநங்கைகளுக்கான கூட்டுறவு வங்கி ஊக்குவிப்புக்குழுத் தலைவர் சியாமா பிரபா தெரிவித்துள்ளார். திருநங்கைகள் என்கிற பேரில் சமூகத்தால் தனிமைப் படுத்துவோருக்கு தங்குமிடத்தை ஏற்படுத்த கூட்டுறவு சங்கம் முடிவு செய்துள்ளதாக அவர் கூறியுள்ளார். கேரள அரசின் இந்த மறுமலர்ச்சி திட்டத்தை பலர் பாராட்டி வருகின்றனர்.