தமிழக மீனவர்களின் படகுகளை மீட்க நடவடிக்கை தேவை | ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட விசைப்படகு மீனவர்கள்

106

இலங்கையில் பிடித்து வைக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்களின் படகுகளை மீட்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, ராமேஸ்வரத்தில் மீனவர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பாம்பன் பகுதியை சேர்ந்த 2 படகுகள் மற்றும் 5 மீனவர்களையும், இலங்கை கடற்படை சிறை பிடித்துள்ளது. இந்த நிலையில், சிறை வைக்கப்பட்டுள்ள மீனவர்களையும் அவர்களின் படகுகளையும் மீட்க மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி,கடந்த 4 ம் தேதி முதல் மீனவர்கள் காலைவறையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.இந்நிலையில் பாம்பன் மற்றும் ராமேஸ்வரம் பகுதியை சேர்ந்த அனைத்து விசை படகு மீனவர்கள் ராமேஸ்வரம் பேருந்து நிலையம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய மீனவர்கள் சங்க நிர்வாகி பாக்கியம் , சிறை வைக்கப்பட்டுள்ள மீனவர்களையும் அவர்களின் படகுகளையும் மீட்க மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.