ஆந்திர சிறையில் அடைக்கப்பட்டுள்ள 32 தமிழர்களை விடுவிக்க நடவடிக்கை. திருப்பதி நீதிமன்றத்தில் அரசு சிறப்பு வழக்கறிஞர்கள் ஜாமீன் மனு தாக்கல்.

318

ஆந்திராவில் கைது செய்யப்பட்டுள்ள 32 தமிழர்களை ஜாமீனில் விடுவிக்க கோரும் மனு, திருப்பதி நீதிமன்றத்தில் இன்று தாக்கல் செய்யப்படுகிறது.
திருப்பதி அருகேயுள்ள சேஷாத்திரி வனப் பகுதியில் செம்மர கடத்தலில் ஈடுபட்டதாக தமிழர்கள் 20 பேர் கடந்த ஆண்டு சுட்டுக் கொல்லப்பட்டனர். இதைத் தொடர்ந்து செம்மரம் வெட்ட வருவதாக கூறி அப்பாவி தமிழர்களை ஆந்திர போலீசார் கைது செய்வது தொடர்கதையாகி வருகிறது.
இந்தநிலையில், கடந்த 4ம் தேதி இரவு ரேணிகுண்டா ரயில் நிலையத்தில்32 தமிழர்களை கைது செய்த போலீசார் அவர்கள் செம்மரங்களை வெட்ட வந்ததாக குற்றம்சாட்டி, சிறையில் அடைத்துள்ளனர். புதிதாக கொண்டு வரப்பட்டுள்ள ஆந்திர வனத்துறை சட்டத்தின்படி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதால், 32 பேரும் ஜாமீனில் வெளியே வருவதில் சிக்கல் உள்ளது. அவர்களுக்கு சட்டரீதியான உதவி செய்ய மூத்த வழக்கறிஞர்கள் முகமது ரியாஸ், அருள் ஆகியோரை முதலமைச்சர் ஜெயலலிதா நியமித்து உள்ளார். இந்தநிலையில், 32 தமிழர்கள் சார்பில் திருப்பதி நீதிமன்றத்தில் இன்று ஜாமீன் மனுவை தாக்கல் செய்ய உள்ளனர்.