நாசிக்கில் அச்சடிக்கப்பட்ட 320 கோடி ரூபாய் மதிப்புள்ள புதிய 500 ரூபாய் நோட்டுக்கள் ராணுவம் மூலம் சென்னை வந்துள்ளது.

360

நாசிக்கில் அச்சடிக்கப்பட்ட 320 கோடி ரூபாய் மதிப்புள்ள புதிய 500 ரூபாய் நோட்டுக்கள் ராணுவம் மூலம் சென்னை வந்துள்ளது.
500 மற்றும் ஆயிரம் ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்று அறிவிக்கப்பட்டதால் நாடு முழுவதும் பணத்தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது. ரிசர்வ் வங்கியில் இருந்து குறைவான பணமே வங்கிகளுக்கு வழங்கப்பட்டு வருவதால் பொதுமக்கள் கேட்கும் தொகையை கொடுக்க முடியாமல் வங்கி அதிகாரிகள் திண்டாடி வருகின்றனர். பணத்தட்டுப்பாட்டை போக்குவதற்காக மராட்டிய மாநிலம் நாசிக்கில் உள்ள மத்திய அரசின் ரூபாய் நோட்டு அச்சகத்தில் புதிய ரூபாய் நோட்டுகள் அச்சடிக்கும் பணி மும்முரமாக நடந்து வருகிறது. கடந்த மாதம் 24 ஆம் தேதி 2 ஆயிரம் கோடி மதிப்பிலான புதிய 500 ரூபாய் நோட்டுக்கள் ராணுவ விமானம் மூலம் சென்னைக்கு கொண்டு வரப்பட்டது. இந்நிலையில், மக்களின் தேவையை கருத்தில் கொண்டு நாசிக்கிலிருந்து மீண்டும் புதிய 500 ரூபாய் நோட்டுக்கள் சென்னைக்கு வந்தன. இந்த நோட்டுக்கள் அனைத்தும் பலத்த பாதுகாப்புடன் சென்னை ரிசர்வ் வங்கிக்கு கொண்டு செல்லப்பட்டது.
தமிழகம் முழுவதும் உள்ள வங்கிகளுக்கு இந்த ரூபாய் நோட்டுக்கள் அனுப்பும் பணி நடைபெற்று வருவதாக ரிசர்வ் வங்கி அதிகாரிகள் தெரிவித்தனர். இதன் மூலம் சில்லறை தட்டுப்பாடு நீங்கும் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.