பாலாற்றின் தடுப்பணை உயரத்தை அதிகரிக்கும் ஆந்திர அரசு..!

187

ஆந்திராவில் பாலாற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள தடுப்பணையின் உயரத்தை 40 அடியாக உயர்த்தும் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. இதனால் தமிழகத்திற்கு ஒரு சொட்டு நீர் கூட கிடைக்க வாய்ப்பு இல்லை என்று விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.

வேலூர் மாவட்ட விவசாயிகளுக்கு ஜீவநதியாக விளங்குவது பாலாறு. இந்த பாலாறின் குறுக்கே ஆந்திர அரசு 21 தடுப்பணைகளை கட்டியுள்ளது. மேலும் ஆந்திர அரசு தடுப்பணைகளின் உயரத்தை உயர்த்திக் கொண்ட வருகிறது. இந்நிலையில், பாலாற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள கங்குத்தி தடுப்பணை ஏற்கனவே ஏழரையடி உயர்த்தப்பட்டது. தற்போது 22 அடியாக இருக்கும் அணையின் உயரத்தை 40 அடியாக உயர்த்தும் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. இதனால் தமிழகத்திற்கு ஒரு சொட்டு நீர் கூட கிடைக்கப்போவதில்லை என்று வேதனை தெரிவிக்கும் விவசாயிகள் தடுப்பணைகளை உயர்த்தினால், வேலூர், திருவண்ணாமலை, திருவள்ளூர், காஞ்சிபுரம், சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் குடிநீருகே பஞ்சம் ஏற்படும் நிலை உருவாகும் என்று கூறுகின்றனர். தற்போது நடைபெறும் பணிகளை தடுத்து நிறுத்த அரசு உடனடி நடிவக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.