உலகின் 2 வது பெரிய ஆலமரத்துக்கு ஆபத்து | மருந்துகள் ஏற்றி சிகிச்சை ..!

1081

தெலுங்கானாவில் பட்டுப்போகும் நிலையில் உள்ள 700 ஆண்டுகள் பழமை வாய்ந்த, உலகின் 2 வது பெரிய ஆலமரத்துக்கு மருந்துகள் ஏற்றி சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
தெலுங்கானா மாநிலம் மெகபூப்நகர் பகுதியில், 700 ஆண்டுகள் பழமையான பில்லாலமாரி என்ற பெயர் கொண்ட ஆலமரம் உள்ளது. உலகிலேயே 2 வது பெரிய ஆலமரமான இது, சுமார் 3 ஏக்கர் பரப்பளவில் படர்ந்துள்ளது. இந்த நிலையில், பூச்சிகளால் அரிக்கப்பட்டு ஆலமரம் முழுமையாக பட்டுப்போகும் நிலை ஏற்பட்டது. இந்த ஆலமரத்தை நேரில் பார்வையிட்ட மாவட்ட ஆட்சியர், இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு வனத்துறையினருக்கு உத்தரவிட்டார். இதையடுத்து, மனிதர்களுக்கு குளுக்கோஸ் செலுத்துவதுபோல், ஆலமரத்திற்கு பூச்சிகளைக் கட்டுப்படுத்த தேவையான மருந்துகள் ஏற்றப்பட்டு வருகின்றன.