2 ஜி ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஊழல் வழக்கில் நாளை தீர்ப்பு!

403

2 ஜி ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஊழல் தொடர்பான வழக்கில் டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் நாளை தீர்ப்பு வழங்க உள்ளது.
2ஜி அலைக்கற்றை ஒதுக்கியதில் அரசுக்கு 1 லட்சத்து 76 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்படுத்தியதாக, முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா., திமுக மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி உள்ளிட்ட 14 பேர் மீது சிபிஐ வழக்கு தொடர்ந்தது. வழக்கை விசாரித்த, டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஓ.பி,ஷைனி, இருதரப்பு வாதங்களும் நிறைவுபெற்று, வாக்குமூலங்கள் பெறப்பட்ட நிலையில், டிசம்பர் 21ம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என்று அறிவித்திருந்தார். மேலும், ஆ.இராசா, கனிமொழி உட்பட அனைவரும் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டிருந்தது. தீர்ப்பு தேதி ஆறுமுறை ஒத்திவைக்கப்பட்ட நிலையில், டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் நாளை தீர்ப்பு வழங்கவுள்ளது. ஆர்.கே.நகர் இடைத்தேர்தலுக்கான வாக்குபதிவு நடைபெறும் அதேநேரத்தில், 2ஜி வழக்கு தீர்ப்பு அறிவிக்கவுள்ளதால் தமிழக அரசியலில் பரபரப்பு அதிகரித்துள்ளது.