2 ஜி அலைக்கற்றை ஊழல் வழக்கு விசாரணையை அடுத்த மாதம் 9ம் தேதிக்கு ஒத்திவைப்பு..!

341

2ஜி அலைக்கற்றை ஊழல் வழக்கில் மேல்முறையீட்டு மனுக்கள் தொடர்பாக ஆ.ராசா, கனிமொழி உள்ளிட்டோர் பதிலளிக்க டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நாடு முழுவதும் பரபரப்பாக பேசப்பட்ட 2 ஜி முறைகேடு வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட அனைவரும் விடுவிக்கப்பட்டனர். சிபிஐ சிறப்பு நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக அமலாக்கத் துறை மற்றும் மத்திய புலனாய்வுத் துறை டெல்லி உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது. இதனிடையே 2ஜி தொடர்புடைய வழக்குகளை 6 மாதங்களுக்குள் விசாரித்து முடிக்க வேண்டும் என்று மத்திய புலனாய்வுத் துறைக்கு உச்சநீதிமன்றம் கடந்த மார்ச் மாதம் 12ம் தேதி உத்தரவிட்டது.

இதன்படி இன்று நடைபெற்ற விசாரணையில் மேல்முறையீட்டு மனுக்கள் தொடர்பாக பதில் அளிக்க முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா, மாநிலங்களவை திமுக உறுப்பினர் கனிமொழி ஆகியோர் பதிலளிக்க நீதிமன்றறம் உத்தரவிட்டுள்ளது. மேலும் வழக்கு விசாரணையை அடுத்த மாதம் 9ம் தேதிக்கு ஒத்திவைத்தும் ஆணையிட்டது .