2ஜி வழக்கில் சிபிஐ தாக்கல் செய்த மேல்முறையீடு வழக்கை ஆகஸ்டு 14 ஆம் தேதிக்கு ஒத்தி வைப்பு..!

448

2ஜி வழக்கில் கனிமொழி, ராசா ஆகியோர் விடுதலை செய்யப்பட்டதற்கு எதிராக சிபிஐ தாக்கல் செய்த மேல்முறையீடு வழக்கை ஆகஸ்டு 14 ஆம் தேதிக்கு டெல்லி உயர்நீதிமன்றம் ஒத்தி வைத்துள்ளது.

நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய 2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் கடந்த டிசம்பர் 21 ஆம் தேதி டெல்லி சிபிஐ நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த சிபிஐ நீதிமன்ற நீதிபதி ஓபி ஷைனி குற்றம்சாட்டப்பட்ட திமுக மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி, முன்னாள் மத்திய அமைச்சர் அ.ராசா ஆகியோரை விடுதலை செய்து தீர்ப்பளித்தார். இந்த தீர்ப்பை எதிர்த்து சிபிஐ தரப்பில் டெல்லி உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீடு மனு இன்று விசாரணைக்கு வந்தது. இதனை விசாரித்த உயர்நீதிமன்றம், ஆகஸ்ட் 14 ம் தேதிக்கு வழக்கை ஒத்திவைத்துள்ளது.