2 ஜி ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஊழல் வழக்கில் டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் நாளை தீர்ப்பு ..!

726

2 ஜி ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஊழல் வழக்கில் டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் நாளை தீர்ப்பு வழங்குகிறது.
2ஜி அலைக்கற்றைகளை ஒதுக்கியதில் அரசுக்கு 1 லட்சத்து 76 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்படுத்தியதாக, முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா, திமுக எம்பி கனிமொழி உள்ளிட்ட 14 பேர் மீது சிபிஐ வழக்கு தொடர்ந்தது. சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஓ.பி,ஷைனி இந்த வழக்கை விசாரித்தார். இருதரப்பு வாதங்களும் நிறைவுபெற்று, வாக்குமூலங்கள் பெறப்பட்ட நிலையில், டிசம்பர் 21ம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என்று நீதிபதி அறிவித்திருந்தார். அன்றைய தினம் ஆ.இராசா, கனிமொழி உட்பட அனைவரும் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்றும் அவர் உத்தரவிட்டார். இந்தநிலையில், 2ஜி வழக்கில் டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் நாளை தீர்ப்பு வழங்கவுள்ளது. ஆர்.கே.நகர் இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறும் போது, வெளியாக உள்ள தீர்ப்பு தமிழக அரசியல் வட்டாரத்தில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.