தமிழக சட்டப்பேரவை 28-ம் தேதி கூடுகிறது..!

171

மக்களவை, சட்டப்பேரவை தேர்தலுக்கு பிறகு, பலத்த எதிர்பார்ப்புக்கு இடையே வரும் 28-ம் தேதி தமிழக சட்டப்பேரவை கூடுகிறது.

28-ம் தேதி கூடும் தமிழக சட்டப்பேரவையின் முதல் நாள் கூட்டத்தில் மறைந்த உறுப்பினர்களுக்கு இரங்கல் தெரிவிக்கப்படுகிறது. இதனையடுத்து, துறை வாரியாக மானியக்கோரிக்கை மீதான விவாதம் நடைபெறும் என தெரிகிறது. பேரவையில் உறுப்பினர்களின் கேள்விகளுக்கு, அமைச்சர்கள் மற்றும் முதலமைச்சர் பதில் அளிக்க உள்ளனர். சுமார் ஒரு மாதக்காலம் நடைபெறும் கூட்டத்தொடரில், குடிநீர், ஹைட்ரோ கார்பன் உள்ளிட்ட பிரச்சினைகளை எழுப்ப திமுக உள்ளிட்ட எதிர்கட்சிகள் திட்டமிட்டுள்ளன. இதனிடையே, சபாநாயகர் தனபால் மீது திமுக கொண்டு வந்துள்ள நம்பிக்கையில்லா தீர்மானம் எடுத்துக்கொள்ள வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. தமிழகத்தில் தற்போது நிலவி வரும் பரபரப்பான அரசியல் சூழ்நிலையில், சட்டசபை கூட்டத் தொடரில் அனல் பறக்கும் விவாதம் நடைபெறும் என்பதில் சந்தேகமில்லை.