ஏழுமலையானை தரிசிக்க 28 மணி நேரம் ஆவதாக பக்தர்கள் தகவல்..!

227

கோடை விடுமுறையையொட்டி திருமலை தேவஸ்தானத்தில் கட்டுக்கடங்காத கூட்டம் குவிந்துள்ளதால் சுவாமி தரிசனம் செய்ய 28 மணி நேரமாவதாக பக்தர்கள் தெரிவித்துள்ளனர்.

உலகில் அதிக வருவாயை ஈட்டித்தரும் கோவில்களில் திருமலை தேவஸ்தானமும் ஒன்று. நாள்தோறும் பல்வேறு நாடுகளிலிருந்தும், மாநிலங்களிலிருந்தும் கூட்டம் குவிந்து வருவது வாடிக்கையாகும். அதுவும் கோடை விடுமுறை என்றால் கூட்டம் அதிகரிக்கும். பொதுவாகவே சாதாரண நேரங்களில் ஏழுமலையானை தரிசிக்க குறைந்தது 8 மணி நேரமாகும். இன்னும் சில தினங்களே கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கப்படும் என்பதால் கட்டுக்கடங்காத கூட்டம் அதிகரித்துள்ளது. இதனால் தற்போது பகவானை தரிசிக்க 28 மணி நேரமாவதாக பக்தர்கள் தெரிவித்துள்ளனர். நேற்று ஒரே நாளில் மட்டும் ஏறக்குறைய ஒரு லட்சம் பக்தர்கள் குவிந்ததாக தேவஸ்தான நிர்வாகம் தெரிவித்துள்ளது.