முன்னாள் அமைச்சர் நடராஜன் உட்பட 279 நிர்வாகிகளை அதிரடியாக நீக்கம் – அ.தி.மு.க. தலைமைக் கழகம் அறிவிப்பு ..!

1129

முன்னாள் அமைச்சர் நடராஜன் உட்பட 279 நிர்வாகிகளை அதிரடியாக நீக்கி அ.தி.மு.க. தலைமைக் கழகம் அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில், ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் நடராஜன் உட்பட 127 பேர் நீக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோன்று, திருவண்ணாமலை தெற்கு மாவட்ட செயலாளர் தருமலிங்கம் உள்ளிட்ட 152 நிர்வாகிகளும், கட்சிக்கு களங்கும் விளைவிக்கும் வகையில் செயல்பட்டதால் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்து பொறுப்புகளில் இருந்து நீக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நீக்கப்பட்ட நிர்வாகிகளுடன் கழக உடன்பிறப்புகள் யாரும் எந்தவித தொடர்பும் வைத்துக்கொள்ளக் கூடாது என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.