24 மணி நேரம் இயங்கும் கடைகளுக்கான மாதிரி சட்டத்திற்கு, பொதுமக்களிடம் போதிய ஆதரவு இல்லை என ஆய்வில் தெரியவந்துள்ளது.

299

24 மணி நேரம் இயங்கும் கடைகளுக்கான மாதிரி சட்டத்திற்கு, பொதுமக்களிடம் போதிய ஆதரவு இல்லை என ஆய்வில் தெரியவந்துள்ளது.
வங்கிகள், கடைகள், திரையரங்குகள் உள்ளிட்டவை, 24 மணி நேரமும் இயங்க வழிவகுக்கும் மாதிரி சட்டத்திற்கு மத்திய அமைச்சரவை அண்மையில் ஒப்புதல் அளித்தது. இந்த சட்டம் குறித்து பொதுமக்களிடம் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. சுமார் 13 ஆயிரம் பேரிடம் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், 24 மணி நேரமும் கடைகள், திரையரங்குகள், சேவை நிறுவனங்கள் ஆகியவை செயல்பட்டால், நாட்டில் சட்ட ஒழுங்கு பாதிக்கும் என்று 73 சதவீதம் பேர் தெரிவித்துள்ளனர்.
24 மணி நேரம் பாதுகாப்பு அளிக்கும் அடிப்படை கட்டமைப்பு வசதிகள் இந்தியாவில் இல்லை என்றும் அவர்கள் கூறியுள்ளனர். இரவிலும் கடைகளில் வியாபாரம் மேற்கொள்ள வாய்ப்பளிக்கும் இத்திட்டத்திற்கு 50 சதவீதம் பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர். 49 சதவீதம் எதிர்ப்பை வெளிப்படுத்தி உள்ளனர். ஒரு சதவீதம் பேர், பதில் அளிக்க மறுத்து விட்டனர்.