நெடுவாசல் போராட்டம் தற்காலிக நிறுத்தம் நெடுவாசல் பகுதி மக்களுக்கு மத்திய அமைச்சர் வாழ்த்து !

265

போராட்டத்தை கைவிட்ட நெடுவாசல் பகுதி மக்களுக்கு மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
ஹைட்ரோ கார்பன் திட்டத்தை தமிழகத்தில் செயல் படுத்த எதிர்ப்பு தெரிவித்து, புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசல் பகுதியில், கடந்த 22 நாட்களாக பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில், ஹைட்ரோ கார்பன் திட்டம் மக்களின் விருப்பமின்றி செயல்படுத்தப்படாது என மத்திய, மாநில அரசுகள் உறுதி அளித்தன. இதனை ஏற்று, அப்பகுதி மக்கள் தற்காலிகமாக தங்கள் போராட்டத்தை ஒத்திவைப்பதாக அறிவித்துள்ளனர். இது தொடர்பாக மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், போராட்டத்தை கைவிட்ட நெடுவாசல் பகுதி மக்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தார்.