2018-ம் ஆண்டு நடைபெற உள்ள 10,11 மற்றும் 12-ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு அட்டவணை அறிவிக்கப்பட்டுள்ளது.

1435

2018-ம் ஆண்டு நடைபெற உள்ள 10,11 மற்றும் 12-ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு அட்டவணை அறிவிக்கப்பட்டுள்ளது.
அரசு தேர்வுகள் இயக்குநர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 10, 11, 12ம் வகுப்பு பொதுத் தேர்வுகளுக்கான கால அட்டவணை இணைக்கப்பட்டுள்ளது.

12thஅதில் 12 -ம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு மார்ச் 1 -ம் தேதி தொடங்கி, ஏப்ரல் 6 -ம் தேதி வரை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மார்ச் -1ம் தேதி மொழி முதல் தாள் என்றும் மார்ச் 2-ம் தேதி மொழி இரண்டாம் தாள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோன்று, 11 -ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு மார்ச் 7-ம் முதல் ஏப்ரல் 14-ம் தேதி வரை நடைபெறும் என்றும் கூறப்பட்டுள்ளது.11th

10 ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு மார்ச் 16-ம் தேதி தொடங்கி, ஏப்ரல் 20 -ம் தேதி வரை நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 10 -ம் வகுப்புக்கான தமிழ் முதல் நாள் 16-ம் தேதியும், தமிழ் இரண்டாம் தாள் 21-ம் தேதி நடைபெறும் என்றும், அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.10th