இந்தியாவில் உற்பத்தி செய்யப்பட வேண்டும் என்ற நிபந்தனையுடன் வெளிநாட்டு நிறுவனங்களிடம் இருந்து 200 போர் விமானங்களை வாங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

277

இந்தியாவில் உற்பத்தி செய்யப்பட வேண்டும் என்ற நிபந்தனையுடன் வெளிநாட்டு நிறுவனங்களிடம் இருந்து 200 போர் விமானங்களை வாங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
இதுதொடர்பாக, பல வெளிநாட்டு நிறுவனங்களுக்கு மத்திய பாதுகாப்பு அமைச்சகம் கடிதம் எழுதியுள்ளது. அதில், ஒரு என்ஜின் கொண்ட 200 போர் விமானங்கள் வேண்டும் எனவும், இது 300 போர் விமானங்களாக அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தங்கள் உற்பத்தி மையத்தை வெளிநாட்டு நிறுவனங்கள், இந்தியாவில் அமைக்க விருப்பம் குறித்த தகவல், இந்த கடிதத்தில் கேட்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதுதொடர்பாக, வெளிநாட்டு நிறுவனங்களின் விருப்பம் மற்றும் எதிர்பார்ப்பு குறித்து அறிய விரும்புவதாகவும் அந்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் ராணுவ விமான உற்பத்தியை அதிகரிக்கும் வகையிலும், செலவுகளை குறைக்கும் வகையிலும், விமானப்படை விமானங்கள் இந்தியாவில் உற்பத்தி செய்ய வேண்டும் என மத்திய அரசு முடிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.