மத்திய அரசின் புதிய இரண்டாயிரம் ரூபாய் நோட்டால், நாட்டில் மக்கள் சில்லறைக்காக போராடும் நிலை ஏற்பட்டுள்ளது.

337

மத்திய அரசின் புதிய இரண்டாயிரம் ரூபாய் நோட்டால், நாட்டில் மக்கள் சில்லறைக்காக போராடும் நிலை ஏற்பட்டுள்ளது.
நாடு முழுவதும் வங்கிகளில் பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகளுக்குப் பதிலாக புதிய ரூபாய் நோட்டுகள் வழங்கப்பட்டு வருகிறது. நாள் ஒன்றுக்கு நபர் ஒருவர் நான்காயிரம் ரூபாய் மட்டுமே மாற்ற முடியும் என்ற ரிசர்வ் வங்கியின் விதியை அடுத்து, பணத்தை மாற்ற வரும் பொதுமக்களுக்கு ஒரு இரண்டாயிரம் ரூபாய்க்கான புதிய நோட்டும், இரண்டாயிரம் ரூபாய்க்கு சில்லறையும் வழங்கப்படுகிறது. இந்த நிலையில் வங்கியில் பெற்ற இரண்டாயிரம் ரூபாயை மாற்ற முடியாமல் மக்கள் தவித்து வருகின்றனர். கடைக்காரா்கள் உரிய சில்லறை இல்லாததால், இந்த புதிய இரண்டாயிரம் ரூபாயை வாங்க மறுப்பதாக பொதுமக்கள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர். இதனை வைத்துக்கொண்டு, என்ன செய்வது எனத்தெரியவில்லை என்றும் அவர்கள், அத்தியாவசியப்பொருட்களை வாங்க முடியாமல் கவலை தெரிவிக்கின்றனர். 500 ரூபாய் நோட்டுகள் திரும்ப பெறப்பட்டதால் 2000 ரூபாய்க்கு சில்லரை கிடைப்பது என்பது அரிதானதாக உள்ளதாக கூறப்படுகிறது.