புதிய 200 ரூபாய் நோட்டுக்களை வெளியிட ரிசர்வ் வங்கி முடிவு செய்துள்ளது.

452

புதிய 200 ரூபாய் நோட்டுக்களை வெளியிட ரிசர்வ் வங்கி முடிவு செய்துள்ளது.
கடந்த ஆண்டு நவம்பர் மாதம் புதிய 500, 2000 ரூபாய் நோட்டுகள் அறிமுகப்படுத்தப்பட்டன. இந்த நிலையில், 200 ரூபாய் நோட்டை புழக்கத்தில் விட ரிசர்வ் வங்கிக்கு அனுமதி அளித்து மத்திய அரசு இன்று அரசாணையை வெளியிட்டது. புதிய 200 ரூபாய் நோட்டுகள் இந்த மாதத்தின் இறுதிக்குள் அல்லது அடுத்த மாதத்தின் ஆரம்பித்திலோ புழக்கத்துக்கு வரலாம் என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

இந்நிலையில் டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி, 2000 ரூபாய் நோட்டை திரும்ப பெறும் திட்டம் ஏதும் மத்திய அரசிடம் தற்போது இல்லை என உறுதியளித்தார். பொது துறை வங்கிகளை இணைக்க புதிய நடைமுறைகள் கொண்டு வரப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.