டூ பாயிண்ட் ஓ திரைப்படம் ஹாலிவுட் தரத்துக்கு எடுக்கப்பட்டுள்ளதால், இந்திய திரையுலகிற்கு பெருமை சேர்க்கும் என நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்தார்.

498

டூ பாயிண்ட் ஓ திரைப்படம் ஹாலிவுட் தரத்துக்கு எடுக்கப்பட்டுள்ளதால், இந்திய திரையுலகிற்கு பெருமை சேர்க்கும் என நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்தார்.
ரசிகர்களால் ஆவலுடன் எதிர்பார்க்கப்படும், இயக்குனர் சங்கரின் டூ பாயிண்ட் ஓ திரைப்படம் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு மும்பையில் நடைபெற்றது. ரஜினிகாந்த், அக்சய்குமார், சல்மான்கான், சங்கர், ஏ.ஆர்.ரகுமான் மற்றும் எமி ஜாக்சன் உள்ளிட்டவர்கள் இதில் கலந்துக்கொண்டனர். அப்போது செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்து பேசிய ரஜினிகாந்த், இந்த படத்தில் வில்லனாக நடிப்பதாக கூறினார். வில்லனாக நடிப்பதே தனது விருப்பம் என்றும் அவர் தெரிவித்தார். 3 டி தொழில்நுட்பத்தில், ஹாலிவுட் தரத்தில் பெரும் பொருட்செலவில் தயாரிக்கப்பட்டுள்ள இந்த படம், உலகளவில் இந்திய திரையுலகிற்கு பெருமையை தேடித்தரும் என்றும் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.