2-ம் பருவத்திற்கான அரசின் விலையில்லா பாடப்புத்தகங்கள் விநியோகம் : 60 லட்சம் மாணவ- மாணவிகள் பயன்பெற்றனர்

263

காலாண்டு தேர்வு முடிந்து பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில் ஒன்றாம் வகுப்பு முதல் 9-ம் வகுப்பு படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு தமிழக அரசின் விலையில்லா பாடப் புத்தகங்கள் வழங்கப்பட்டன.

காலாண்டு தேர்வுகள் முடிந்து விடுமுறை விடப்பட்டு, நேற்று பள்ளிகள் திறக்கப்பட்டன. இந்நிலையில், 2-ம் பருவத்திற்கான பாடப்புத்தகங்கள் தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழக நிர்வாக இயக்குனர், அதிகாரிகளின் ஏற்பாட்டில் அச்சிடப்பட்டு அனைத்து மாவட்டங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டன.
அந்த வகையில் பாடப்புத்தகங்கள், நோட்டு புத்தகங்கள் ஆகியவை 1-ம் வகுப்பு முதல் 9-ம் வகுப்பு வரை அரசு பள்ளி மாணவ-மாணவிகளுக்கும், அரசு உதவி பெறும் பள்ளி மாணவ-மாணவிகளுக்கும் வழங்கப்பட்டது. நேற்று ஒரே நாளில் அனைத்து மாவட்டங்களிலும் 60 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா பாடப்புத்தகங்கள் வழங்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.