இந்தியாவில் 2 கோடி ஏழை மக்களுக்கு வீடுகள் கட்டித்தர நிதி ஒதுக்கித் தரப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

340

பிரதமரின் ஆவாஸ் யோஜானா திட்டத்தின் கீழ், 2022 ஆம் ஆண்டிற்குள் 2 கோடிப் பேருக்கு வீடு கட்டித் தர மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இந்த திட்டத்தின்படி, மிகவும் நலிவடைந்தவர்களுக்கு மாநில அரசுகள் நிலத்தை ஒதுக்கினால், வீடுகட்ட தேவையான நிதி ஒதுக்கித் தரப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. மேலும், இந்த வீடுகளுக்கு மின்சாரம், குடிநீர், எரிவாயு சிலிண்டர் இணைப்புகளும் கூடுதலாக வழங்கப்படும். குறிப்பாக, 60 சதவீத வீடுகள், மண் குடிசைகளில் வாழும் எஸ்.சி மற்றும் எஸ்.டி பிரிவினருக்கு வழங்கப்படுவதாக மத்திய ஊரக வளர்ச்சித் துறை தெரிவித்துள்ளது.