+2 அசல் மதிப்பெண் சான்றிதழ் ஜூலை 16ம் தேதி முதல் பெறலாம் என தேர்வுத்துறை அறிவிப்பு..!

261

பன்னிரண்டாம் வகுப்பு அசல் மதிப்பெண் சான்றிதழை வரும் 16ம் தேதி முதல் பெற்றுக்கொள்ளலாம் என தேர்வுத்துறை அறிவித்துள்ளது.

12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுக்குப் பின், மாணவர்கள் உயர்கல்வியில் சேர வசதியாக, தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்கள் வழங்கப்பட்டிருந்தது. இந்தநிலையில் அசல் சான்றிதழ் வரும் 16ம் தேதி முதல் பெற்றுகொள்ளலாம் என தேர்வுத்துறை இயக்குநர் வசுந்தராதேவி அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், 12ம் வகுப்பு தேர்வெழுதிய அனைத்து மாணவர்களும் ஜூலை 16 -ஆம் தேதி காலை 10 மணி முதல் அந்தந்தப் பள்ளிகள் மூலம் அசல் மதிப்பெண் சான்றிதழை பெற்றுக்கொள்ளலாம் என்றும், தனித் தேர்வர்கள் தங்களது மதிப்பெண் சான்றிதழ்களை தாங்கள் தேர்வு எழுதிய மையத்திலேயே பெற்றுக் கொள்ளலாம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.