ரஜினிகாந்த் நடிப்பில் தயாராகியுள்ள 2.0 திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா துபாயில் பிரம்மாண்டமாக நடைபெற்றது…!

717

ரஜினிகாந்த் நடிப்பில் தயாராகியுள்ள 2.0 திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா துபாயில் பிரம்மாண்டமாக நடைபெற்றது.
லைகா புரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பில் ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த், அக்‌ஷய்குமார், எமி ஜாக்சன், நடித்து ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ள 2.O. படத்தின் இசை வெளியீட்டு விழா துபாயில் கோலாகலமாக நடைபெற்றது. உலகின் மிக உயரமான கட்டிடமான புரூஜ் அல் கலிபாவில் இந்திய நேரப்படி நேற்று இரவு 11 மணிக்கு தொடங்கிய இந்த நிகழ்ச்சியில் பல்லாயிரக்கணக்கானோர் கலந்துகொண்டனர்.
இதில், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் 125 சிம்பொனி கலைஞர்களுடன் இணைந்து இசை நிகழ்ச்சியை நேரலையாக நடத்தினார். இதனைத் தொடா்ந்து 2.0 வின் இரண்டு பாடல்கள் முதல்கட்டமாக வெளியிடப்பட்டுள்ளது. 400 கோடி ரூபாய் பொருட்செலவில் பிரம்மாண்டமாக தயாரிக்கப்பட்டுள்ள இந்த படம் 2018 ஆம் ஜனவரி மாதம் 25 ஆம் தேதி வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.