18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டதற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று மீண்டும் விசாரணை..!

231

18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டதற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று மீண்டும் விசாரணைக்கு வருகிறது.
முதலமைச்சர் பழனிச்சாமி அரசுக்கு அளித்து வந்த ஆதரவை தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் 18 பேர் விலக்கிக்கொண்டனர். இதையடுத்து, அவர்கள் அனைவரையும் தகுதி நீக்கம் செய்து சபாநாயகர் தனபால் உத்தரவிட்டார். இதை எதிர்த்து 18 எம்.எல்.ஏக்களும் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர். இந்த வழக்கை கடந்த மாதம் 21 ஆம் தேதி விசாரித்த நீதிபதி துரைசாமி, 18 எம்.எல்.ஏ.க்களின் தகுதி நீக்கத்துக்கு உடனடியாக தடை விதிக்க முடியாது என
தெரிவித்தார். மேலும், சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்துவதற்கு விதிக்கப்பட்டிருந்த தடையை நீட்டித்து உத்தரவிட்டு வழக்கின் விசாரணை அக்டோபர் 4 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

இந்நிலையில், இந்த வழக்கு உயர்நீதிமன்றத்தில் இன்று மீண்டும் விசாரணைக்கு வருகிறது. இந்த வழக்கின் புதிய நீதிபதியாக ரவிசந்திர பாபுவை நியமித்து தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி உத்தரவிட்டுள்ளார். தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் 18 பேரும் தகுதி நீக்கம் செய்யப்படுவார்களா அல்லது சபாநாயகரின் முடிவில் தலையிட முடியாது எனக்கூறி மனு தள்ளுபடி செய்யப்படுமா என்பது இன்றைய விசாரணை முடிவில் தெரியவரும் என்பது குறிப்பிடத்தக்கது.