18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கில் 23-ம் தேதி முதல் 27 வரை 5 நாட்கள் விசாரணை தொடங்கும் – நீதிபதி சத்தியநாராயணன்

174

18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கின் விசாரணையை மூன்றாவது நீதிபதி சத்தியநாராயணன் தொடங்கியுள்ளார். வரும் 23 ஆம் தேதிமுதல் 27 ஆம் தேதி வரை வழக்கு விசாரணை தினமும் நடைபெறும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

எம்.எல்.ஏக்கள் 18 பேர் தகுதி நீக்கம் செய்யப்பட்ட வழக்கில் உயர்நீதிமன்றத்தின் இரண்டு நீதிபதிகளும் மாறுபட்ட தீர்ப்பு வழங்கியதைதொடர்ந்து, வழக்கில் 3-வது நீதிபதியாக விமலா நியமனம் செய்யப்பட்டார். இதனையடுத்து, தங்க தமிழ்ச்செல்வனை தவிர மற்ற 17 எம்.எல்.ஏக்களும் தொடர்ந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், நீதிபதி விமலாவுக்கு பதிலாக 3-வது நீதிபதியாக சத்தியநாரயணனை நியமித்து உத்தரவிட்டது.

இந்தநிலையில், 18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கின் விசாரணையை சென்னை உயர்நீதிமன்றத்தில் 3-வது நீதிபதி சத்தியநாராயணன் தொடங்கியுள்ளார். வரும் 23 ஆம் தேதிமுதல் 27 ஆம் தேதிவரை 5 நாட்கள் வழக்கு விசாரணை தினமும் நடைபெறும் என தெரிவித்துள்ள நீதிபதி சத்தியநாராயணன், வழக்கு விசாரணையை ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளார்.