18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கு : 3 வது நீதிபதி சத்திய நாராயணன் முன்பு இன்று இறுதி விசாரணை

268

18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கில் 3 வது நீதிபதி சத்திய நாராயணன் முன்பு இன்று இறுதி விசாரணை நடைபெறுகிறது.

தமிழக சட்டசபையில் 18 எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்தது தொடர்பான வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் நீதிபதிகள் இரு வேறு தீர்ப்புகளை வழங்கியதை அடுத்து மூன்றாவது நீதிபதிக்கு வழக்கின் விசாரணை மாற்றப்பட்டது. இதையடுத்து நீதிபதி சத்யநாராயணா வழக்கை விசாரித்து வருகிறார். இந்நிலையில், இந்த வழக்கில் முதல்வர், சபாநாயகர், அரசு கொறடா ஆகியோர் தரப்பு வாதம் நடைபெற்று வந்தது.

இதில் அரசு தலைமை கொறடா சார்பில் மூத்த வக்கீல் முகுல் ரோத்தகியும் தனது வாதாத்தை நிறைவு செய்துள்ளார். இதனை தொடர்ந்து சபாநாயகர் தனபால் தரப்பு வாதிட அவகாசம் கேட்டதால் வழக்கு இன்று ஒத்திவைக்கப்பட்டது. இதன்படி இன்று வழக்கின் இறுதி விசாரணை நடைபெறுகிறது. இதனால் இந்த வழக்கின் தீர்ப்பு தேதி இன்று அறிவிக்கப்படலாம் என அரசியல் கட்சிகள் எதிர்பார்த்துள்ளனர்.