பிரிட்டன் எண்ணெய்க் கப்பலைச் சிறைபிடித்தது ஈரான்..!

192

ஈரான் அரசு சிறைபிடித்த பிரிட்டன் நாட்டு எண்ணெய்க் கப்பலில் சிக்கித் தவிக்கும் இந்தியர்கள் 18பேரை மீட்கும் நடவடிக்கையில் வெளியுறவுத்துறை அமைச்சகம் ஈடுபட்டுள்ளது.

பாரசீக வளைகுடாவில் ஆர்மஸ் நீரிணைப் பகுதியில் சென்றுகொண்டிருந்த பிரிட்டன் எண்ணெய்க் கப்பலை ஈரான் கடற்படை சிறை பிடித்துள்ளது. சிறைபிடிக்கப்பட்ட ஸ்டெனா இம்பீரோ கப்பலில் 23 பணியாளர்கள் இருந்தனர். அவர்களில் 18 பேர் இந்தியர்கள் என்பதால் அவர்களை விடுவிப்பதற்காக ஈரானில் உள்ள இந்திய தூதரகத்தின் மூலம் பேச்சு நடத்தப்பட்டு வருகிறது. இதுகுறித்து, வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ரவீஷ் குமார் செய்தியாளர்களிடம் பேசுகையில், சிறைபிடிக்கப்பட்டுள்ள கப்பலில் உள்ள இந்தியர்கள் 18 பேரை மீட்கும் பணிகளை இந்திய அரசு முடுக்கி விட்டுள்ளதாகத் தெரிவித்தார்.