கர்நாடக தேர்தலில்150க்கும் மேற்பட்ட தொகுதிகளில் பா.ஜ.க வெற்றி பெறும் – எடியூரப்பா நம்பிக்கை.

358

கர்நாடக தேர்தலில் 150க்கும் மேற்பட்ட தொகுதிகளில் பா.ஜ.க வெற்றி பெறும் என முதல்வர் வேட்பாளர் எடியூரப்பா நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

கர்நாடகாவில் நடைபெறும் சட்டமன்ற தேர்தலில் மும்முனை போட்டி நிலவுகிறது. இதில் பா.ஜ.க சார்பில் முதல்வர் வேட்பாளராக போட்டியிடும் எடியூரப்பா வாக்குப்பதிவுக்கு முன்பாக கோவிலில் வழிபாடு செய்தார். பின்னர் ஷிகார்பூரில் உள்ள வாக்குசாவடியில் தனது வாக்கினை பதிவு செய்தார். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த எடியூரப்பா, 150க்கும் மேற்பட்ட தொகுதிகளில் பா.ஜ.க வெற்றி பெறும் என நம்பிக்கை தெரிவித்தார்.

முன்னாள் பிரதமர் தேவகவுடா ஹசன் தொகுதியில் தனது மனைவியுடன் சேர்ந்து வாக்களித்தார். மத்திய அமைச்சரும், முன்னாள் முதல்வருமான சதானந்த கவுடா புட்டூர் தொகுதியில் வாக்களித்து ஜனநாயக கடமையை ஆற்றினார்.