14 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்

வந்தவாசி அருகே பல்வேறு பகுதிகளில் இருசக்கர வாகனங்களை திருடிய நான்கு பேரை போலீசார் கைது செய்தனர்.

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி பேருந்து நிலையம் அருகே தெற்கு காவல் நிலைய போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு பேரை மடக்கி விசாரித்தனர். அவர்கள் முன்னுக்குப் பின் முரணாகப் பேசவே சந்தேகமடைந்த போலீசார் இருவரையும் காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். அதில் இருவரும் காஞ்சிபுரத்தை சேர்ந்த வசந்தகுமார் மற்றும் மணிகண்டன் என்பதும் பல்வேறு பகுதிகளில் இருசக்கர வாகனங்களை திருடியதும் தெரியவந்தது. இவர்களுக்கு ஆகாஷ் மற்றும் கார்த்திக் ஆகியோர் உதவியாக இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து 4 பேரையும் கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து 14 இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்தனர்.