12-ம் வகுப்பு விடைத்தாள் திருத்துவதில் கட்டுப்பாடு. | மாணவர்களின் தேர்ச்சி விகிதம் குறையும் அபாயம் ..!

916

பனிரெண்டாம் வகுப்பு விடைத்தாளில் ஒரு மதிப்பெண் விடைகளுக்கு மதிப்பெண் வழங்குவதில் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதால் மாணவர்களின் தேர்ச்சி விகிதம் குறையும் அபாயம் ஏற்பட்டுள்ளது. பனிரெண்டாம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணி துவங்கியுள்ள நிலையில், ஒரு மதிப்பெண் வினாக்களுக்கு மாணவர்கள் விடையுடன் விடைக்கான குறியீட்டையும் சேர்த்து எழுதினால் மதிப்பெண் வழங்க வேண்டாம் என விடைத்தாள் திருத்தும் ஆசிரியர்களை தேர்வுத் துறை அறிவுறுத்தியுள்ளது. இந்த புதிய கட்டுப்பாடால் பெரும்பாலான மாணவர்கள் விடையை சரியாக எழுதியிருந்தாலும் அவர்களுக்கு மதிப்பெண்கள் வழங்க இயலாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும், இதனால் மாணவர்களின் தேர்ச்சி விகிதம் குறையும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகவும் ஆசிரியர்கள் அதிர்ச்சி தெரிவித்துள்ளனர்.