12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தொழிற்சங்கங்கள் சார்பில் நாளை நடைபெறும் வேலை நிறுத்த போராட்டத்தில் சுமார் 18 கோடி பேர் கலந்து கொள்வார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

335

12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தொழிற்சங்கங்கள் சார்பில் நாளை நடைபெறும் வேலை நிறுத்த போராட்டத்தில் சுமார் 18 கோடி பேர் கலந்து கொள்வார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும், பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்கக் கூடாது, புதிய ஓய்வூதிய திட் டத்தை கைவிட வேண்டும் என்று தொழிற் சங்கங்கள் வலியுறுத்தி வருகின்றன. இவை தொடர்பாக 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நாளை நாடு தழுவிய வேலை நிறுத்த போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. மத்திய, மாநில தொழிற்சங்கங்கள் சார்பில் இந்த போராட்டம் நடத்தப்படுகிறது. போக்குவரத்து தொழிற்சங்கங்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவதால், பேருந்துகள், லாரிகள், ஆட்டோக்கள் ஓடாது எனத் தெரிகிறது. அரசுப் பணிகளும், வங்கிப் பணிகளும் பாதிக்கப்படும் எனத் தெரிகிறது. அகில இந்திய போராட்டத்தை வெற்றி பெறச் செய்ய முனைப்பு காட்டி வரும் தொழிற்சங்கங்கள், சுமார் 18 கோடி பேர் வேலைநிறுத்தத்தில் பங்கேற்பார்கள் எனத் தெரிவித்துள்ளது.