புதுச்சேரியில் 121 பெண்கள் தொடர்ந்து 36 மணி நேரம் யோகா செய்து கின்னஸ் சாதனை புரிந்துள்ளனர்.

சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு புதுச்சேரியில் காஞ்சிபுரம் மஹாயோகம் என்ற அறக்கட்டளை சார்பில் 121 பெண்கள் பங்கேற்ற யோகா நிகழ்ச்சி நடந்தது. முதல்வர் நாராயணசாமி தலைமையில் நடைபெற்ற இந்த யோகா நிகழ்ச்சியில் துணை நிலை ஆளுநர் கிரண்பேடி சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார். நேற்று முன் தினம் காலை 7 மணிக்கு தொடங்கிய இந்த யோகா நிகழ்ச்சி நேற்று இரவு 7 மணிக்கு முடிந்தது. இதன்மூலம் 36 மணி நேரம் தொடர்ந்து யோகாவில் ஈடுபட்ட 121 பெண்களும் கின்னஸ் சாதனை படைத்தனர். அவர்களுக்கு புதுவை துணை நிலை ஆளுநர் கிரண்பேடி கேடயம் வழங்கி கௌரவித்தார்.