ஊழலை வேரறுக்க முடிவெடுத்துள்ள மத்திய அரசு, 12 வருமான வரித்துறை உயரதிகாரிகளுக்கு கட்டாய ஒய்வு அளிக்க முடிவு

159

ஊழலை வேரறுக்க முடிவெடுத்துள்ள மத்திய அரசு, 12 வருமான வரித்துறை உயரதிகாரிகளுக்கு கட்டாய ஒய்வு அளிக்க முடிவு செய்துள்ளது.

அரசியல்வாதிகள் மட்டுமின்றி, அவர்களுக்கு நிகராக உயர் அதிகாரிகளும் ஊழலில் ஊறித்திளைக்கும் காலம்தான் இக்காலம். அந்த அளவுக்கு அடி மட்டம் முதல் உச்சி வரை ஊழல் ஊடுருவியுள்ளது.

மோடியின் கடந்த கால ஆட்சியில், மூன்று வருமான வரித்துறை அதிகாரிகளுக்கு கட்டாய ஒய்வு அளிக்கப்பட்ட விஷயம் பரபரப்பை ஏற்படுத்தியது. இதே அஸ்திரத்தை மீண்டும் முனைப்போடு பயன்படுத்த மத்திய அரசு முற்பட்டுள்ளது. இந்நிலையில் முதற்கட்டமாக 56 ஜெ என்ற விதிமுறையை பயன்படுத்தி வருமான வரித்துறை உயர் அதிகாரிகள் 12 பேருக்கு கட்டாய ஒய்வு அளிக்கப்பட்டுள்ளது. இவர்கள் அனைவரும் 50 வயதை கடந்தவர்கள் என்பது குறிப்பிட தக்கது. பொது நலனுக்கு ஊறு விளைவிக்கும் வகையில் செயல்படுவோர் மீது நடவடிக்கை எடுக்கலாம் என்பதுதான், 56 ஜெ விதிமுறையின் சாராம்சமாகும். பொருளாதார குற்றவாளிகள் மீது ஏற்கனவே சில நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ள போதிலும், இது போதுமானதல்ல என்ற நிலை காணப்பட்டதால், முறைகேடுகளை களைய கடும் நடவடிக்கை எடுக்க அரசு முன்வந்துள்ளது. கட்டாய ஒய்வு அளிக்கப்பட்டுள்ளவர்களுக்கு ஓய்வூதிய பலன் எதுவும் அளிக்கப்படமாட்டாது என்பது குறிப்பிட தக்கது.