தமிழகம் முழுவதும் பதினொன்றாம் வகுப்பு பொதுத்தேர்வுகள் இன்று முதல் தொடக்கம் ..!

456

தமிழகம் முழுவதும் இன்று முதல் முறையாக பிளஸ் ஒன் வகுப்புக்கு பொதுத் தேர்வு தொடங்கி நடைபெற்று வருகிறது. 8 லட்சத்து 62 ஆயிரம் மாணவ, மாணவியர் இத்தேர்வை எழுதுகின்றனர்.
மாணவர்களின் எதிர்கால நலனைக் கருத்தில் கொண்டு இந்த கல்வியாண்டு முதல், பிளஸ் 1 வகுப்புக்கு பொதுத் தேர்வு நடத்தப்படும் என தமிழக அரசு அறிவித்தது. இதன் படி இன்று பிளஸ் ஒன் வகுப்புக்கு இன்று முதல் ஏப்ரல் 16ம் தேதி வரை பொதுத் தேர்வு நடைபெறுகிறது. தமிழகம், புதுச்சேரியில் உள்ள 7 ஆயிரத்து 70 பள்ளிகளில் இருந்து சுமார் 8 லட்சத்து 62 ஆயிரம் பேர் இந்த தேர்வை எழுதுகின்றனர். இதே போல் சிறைக் கைதிகள் 62 பேர் புழல் மத்திய சிறையில் அமைக்கப்பட்டுள்ள மையத்தில் தேர்வு எழுதுகின்றனர். பிளஸ் 1 பொதுத் தேர்வுக்காக தமிழகம் முழுவதும் 2,795 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. முறைகேடுகளை தடுக்க 4 ஆயிரம் பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன.