நாடு முழுவதும் அவசரகால உதவி எண்ணாக 112-ஐ மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.

503

நாடு முழுவதும் அவசரகால உதவி எண்ணாக 112-ஐ மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.
தீ விபத்து, காவல், சுகாதாரம் உள்ளிட்ட அவசர கால உதவிக்கு பொதுமக்கள் 112 என்ற எண்ணுக்கு அழைக்கலாம் என மத்திய உள்துறை அமைச்சகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. முதல்கட்டமாக சில மாநிலங்களில் மையங்கள் அமைக்கும் பணி செயல்படுத்தப்படும் என்றும், பின்னர் நாடு முழுவதும் விரிவுப்படுத்தப்படும் என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது. 329 கோடி ரூபாய் திட்ட மதிப்பீட்டில் இத்திட்டத்தை செயல்படுத்த ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு கூறியுள்ளது.