தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் பிளஸ்-1 பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்படுகின்றன.

211

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் பிளஸ்-1 பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்படுகின்றன.

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் முதன் முறையாக பிளஸ்-1 மாணவர்களுக்கு அரசு பொதுத்தேர்வு கடந்த மார்ச் 7 ஆம் தேதி தொடங்கி நடைபெற்றது.இந்த தேர்வை தமிழ்நாடு, புதுச்சேரியை சேர்ந்த 8 லட்சத்து 63 ஆயிரத்து 668 மாணவ மாணவிகள் எழுதினர்.

மாணவ-மாணவிகள் முறைகேடுகளில் ஈடுபடுவதை தடுக்க 4 ஆயிரம் பேர் கொண்ட பறக்கும் படை அமைக்கப்பட்டிருந்தது.விடைத்தாள் மதிப்பீடு செய்யப்பட்டு மதிப்பெண்களை கணினியில் பதிவு செய்யும் பணி முடிவடைந்துள்ளதை அடுத்து, பிளஸ்-1 தேர்வு முடிவுகள் இன்று காலை 9 மணிக்கு இணையதளங்களில் வெளியிடப்படுகின்றன.

இந்த தேர்வு முடிவுகளை www.tnresults.nic.in, www.dge.tn.nic.in, www.dge2.tn.nic.in என்ற இணையதளங்கள் மூலம் மாணவர்கள் தெரிந்து கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.