கரூரில் மரக்கடையில் ஏற்பட்ட தீ விபத்தில் 10 லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருள்கள் தீயில் எரிந்து சேதமடைந்தன.

223

கரூரில் மரக்கடையில் ஏற்பட்ட தீ விபத்தில் 10 லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருள்கள் தீயில் எரிந்து சேதமடைந்தன.

கரூர் – கோவை சாலையில் கணேசன் என்பவர் மரக்கடை நடத்தி வருகிறார். அந்த கடையில் தீடீரென தீ விபத்து ஏற்பட்டது. மளமளவென பரவிய தீ கடை முழுவதும் பரவியது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத்துறையினர் இரண்டு மணி நேர போராட்டத்திற்கு பிறகு தீயை அணைத்தனா். இந்த தீ விபத்தில் 10 லட்சம் ரூபாய் மதிப்பிலான மரங்கள் மற்றும் இயந்திரங்கள் தீயில் எரிந்து சேதமடைந்தன. விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.