100 ஆண்டுகள் பழமையான செங்கோட்டை-புனலூர் பாதையில் வருகிற 2017ம் ஆண்டு மார்ச் மாதத்தில் ரயில்கள் இயக்கப்படும் என தலைமை நிர்வாக அதிகாரி தெரிவித்துள்ளார்.

376

100 ஆண்டுகள் பழமையான செங்கோட்டை-புனலூர் பாதையில் வருகிற 2017ம் ஆண்டு மார்ச் மாதத்தில் ரயில்கள் இயக்கப்படும் என தலைமை நிர்வாக அதிகாரி தெரிவித்துள்ளார்.

தமிழக-கேரள மாநிலத்தை இணைக்கும் ரயில்பாதை நூறாண்டு பழமையானது. செங்கோட்டை முதல் புனலூர் வரையிலான மீட்டர் கேஜ் சேவையை அகல ரயில் பாதையாக மாற்ற கடந்த 2010ம் ஆண்டு ரயில் சேவை நிறுத்தப்பட்டது. இதனை தொடர்ந்து அகலபாதை பணிகள் தொடங்கப்பட்டு 6 ஆண்டுகள் நிறைவடைந்தும், நிதி பற்றாக்குறை மற்றும் பாறைகளை குடைந்து குகை அமைத்தல் உள்ளிட்ட பல காரணங்களால் பணிகள் மந்தமாக நடைபெற்று வந்தன. தற்போது தென்மலை அருகே புதிதாக ஒரு குகை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. செங்கோட்டையில் இருந்து சுமார் 1 கிலோ மீட்டர் நீளமுடைய ஆரியங்காவு குகை வரை தண்டவாளங்கள் போடப்பட்டுள்ளது. புனலூரில் இருந்து தென்மலை வரையிலும், பணிகள் முடிந்துள்ளது. இடைப்பட்ட பகுதிகளில் மட்டும் வேலைகள் நடைபெற்று வருகிறது. இந்த பணிகளை விரைந்து முடிக்க வேண்டி, திட்டத்திற்காக தனி நிர்வாக அதிகாரி சுதாகர் ராவ் நியமிக்கப்பட்டுள்ளார். இன்று காலை செங்கோட்டை வந்த அவர், அங்குள்ள அதிகாரிகளிடம் இத்திட்டத்தின் தற்போதைய நிலை குறித்து கேட்டறிந்தார். தனது ஆய்வு பற்றி செங்கோட்டையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இந்த அகலபாதை திட்டத்திற்காக தனி அதிகாரியாக தான் பொறுப்பேற்று கொண்டுள்ளதாகவும், வருகிற பிப்ரவரி மாதத்திற்குள் பணிகளை முடித்து மார்ச் மாதத்தில் ரயில்களை இயக்க இருப்பதாக தெரிவித்தார்.