நூறு நாள் வேலை திட்டத்திற்கு நிதி ஒதுக்கீடு அதிகரிப்பு!

303

நூறு நாள் வேலை திட்டத்துக்கு, 58 ஆயிரம் கோடி ரூபாயாக உயர்த்தி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக மத்திய ஊரக மேம்பாட்டுத்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் தெரிவித்துள்ளார்.
டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த அவர், கிராமப்புற மக்களுக்கு வேலை வாய்ப்பு அளிக்கும் நோக்கில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதியளிப்பு திட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்ததாக தெரிவித்தார். 2012 – 2013 நிதியாண்டில் 38 ஆயிரம் கோடி ரூபாய் பட்ஜெட்டில் நிதி ஒதுக்கீடு செய்த நிலையில், கடந்த நிதியாண்டில் 58 ஆயிரம் கோடி ரூபாயாக உயர்த்தி பட்ஜெட்டில் அறிவித்ததாக தோமர் குறிப்பிட்டார். மேலும், நூறு நாள் வேலை திட்டத்தில் பணிபுரிவோருக்கு, 15 நாட்களுக்குள் வங்கிக் கணக்கில் சம்பளம் வழங்கப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.