புதிய கட்டண நடைமுறை பிப்ரவரி 8-ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது..!

283

சென்னையில் விருப்பம்போன்று பயணம் செய்யும் மாதாந்திர பஸ் பாஸ் கட்டணம் ஆயிரத்து 300 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.சென்னையில் மாநகரப் பேருந்துகளில் விருப்பம்போல் பயணம் செய்யும் மாதாந்திர பஸ் பாஸ் கட்டணம் ஆயிரம் ரூபாய்க்கு வழங்கப்பட்டு வந்தது.இந்தநிலையில், போக்குவரத்து கட்டணம் உயர்வு காரணமாக மாதாந்திர பஸ் பாஸ் கட்டணம் ஆயிரத்து 300 ரூபாயாக மாற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதேபோன்று, 50 ரூபாய்க்கு வழங்கப்பட்டு வந்த ஒருநாள் பஸ் பாஸ் கட்டணம் 80 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளதாகவும் தெரிகிறது. இந்த புதிய கட்டண நடைமுறை வரும் 8 ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் என்றும், பஸ் பாஸ்களை வரும் 14 ஆம் தேதியிலிருந்து பெற்றுக் கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.