கோவில்பட்டி அருகே மிக்கேல் அதிதூதர் தேவாலயத்தில் 100 சவரன் தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது

356

கோவில்பட்டி அருகே மிக்கேல் அதிதூதர் தேவாலயத்தில் 100 சவரன் தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே எட்டுநாயக்கன்பட்டியில் மிக்கேல் அதிதூதர் தேவாலயம் அமைந்துள்ளது. இந்த தேவாலயத்தின் சப்பரபவனி திருவிழா கடந்த 20ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இன்று சிறப்பு திருப்பலிக்காக ஆலயம் திறப்பட்டப்போது ,மிக்கேல் ஆண்டவர் சொரூபத்தில் இருந்த தங்க கிரீடம் மற்றும் கழுத்தில் அணிவிக்கப்பட்டிருந்த நகைகள் கொள்ளையடிக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. இது குறித்து தேவாலயத்தின் பங்கு தந்தை அருள்ராஜ் கொப்பம்பட்டி போலீசாருக்கு தகவல் கொடுத்தார். இதையடுத்து கொள்ளையடிக்கப்பட்ட நகைகளின் மதிப்பு 100 சவரன் என விசாரணையில் தெரியவந்தது. திருவிழாவின்போது 100 சரவன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.